Voluntary Repatriation to Sri Lanka|சுய விருப்பத்தோடு இலங்கைக்கு நாடு திரும்புதல்

Every year, UNHCR helps hundreds of Sri Lankan refugees to voluntarily return home. This information and preparation guide is intended to provide the necessary basic information that would allow you to make an informed decision.

If you are a Sri Lankan refugee living in Tamil Nadu and thinking about returning to Sri Lanka, UNHCR can assist you with counselling and advice; meeting the international travel, exit and entry requirements; obtaining necessary documentation; a reintegration grant and post return support. For more information, contact UNHCR.

சுய விருப்பத்தோடு இலங்கைக்கு நாடு திரும்புதல்

ஒவ்வொருவருடமும் ,பல இலங்கை அகதிகள் மற்றும் புகலிடம்  தேடுவோர்  தமது சுயவிருப்பப்படி தங்களது தாய் நாட்டிற்கு திரும்புவதற்கு UNHCR உதவி அளிக்கின்றது .இந்த UNHCR  தகவல் வழிகாட்டி ஆனது,நீங்கள் விபரமறிந்து முடிவு ஒன்றை எடுப்பதற்கு வழிவகுக்கக் கூடிய அவசியமான அடிப்படை தகவலை வழங்குவதை  நோக்காக கொண்டதாகும்.

நீங்கள் இலங்கை திரும்புவது தொடர்பில் சிந்திக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு  UNHCR இன்  உதவி அவசியம் என்றால் எம்மால் உங்களுக்கு : உளவளத்துணை  மற்றும் ஆலோசனை;சர்வதேச பயணம் ,நாட்டை விட்டு வெளியேறுதல் மற்றும் நுழைதல் தொடர்பான தேவைப்பாடுகளை எதிர் கொள்வதற்கு தேவையாகவுள்ள உதவி; அவசியமான ஆவணங்கள் பெற்றுக்கொள்ளல் ;மீள் ஒருமைப்பாட்டு மனியத்தொகை வழங்கல் ,நாடு திருப்பியதற்கு பின்னராக உதவிகள் போன்றவற்றை வழங்க முடியும். மேலதிக தகவல்களுக்காக ,எம்மை தொடர்பு கொள்ள 

சென்னைகள அலுவலகம்                

இல.11,17ஆம் குறுக்கு தெரு,பெசன்ட்நகர்  600090சென்னை

தொ.பே:+914424461735  

மின்னஞ்சல்:  [email protected]

There are a number of important things to do before and after you arrive in Sri Lanka. Every refugee returnee will encounter different situations, thus the information provided is only an indication of what you may need to do at different stages.

நீங்கள் இலங்கையை வந்தடைய முன்னரும்,பின்னரும் செய்யவேண்டிய பல முக்கிய விடயங்கள்காணப்படுகின்றன.   நாடு திரும்பும் ஒவ்வொரு அகதியும் மாறுபட்ட நிலைமைகளுக்கு முகம் கொடுப்பார்கள். எனவேதான், பல்வேறுநிலைமைகளின் போது நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் குறித்துரைப்பதற்கான ஒன்றாகவே இந்த தகவல் வழங்கப்படுகின்றது .


Make the decision: Do you want to go back home? | தீர்மானம் எடுங்கள்:நீங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டுமா?

If you are considering returning home, it is important to remember the decision to return is yours. During the time that you’ve been away, the situation in Sri Lanka has also changed. Try to find out as much information as possible by:

  1. Contacting your family members and friends where you intend to return in Sri Lanka by telephone, letter or email and ask what the current conditions are in your intended place of return.
  2. Speaking to UNHCR officials in India. UNHCR staff will be able to discuss your options and help you understand what type of assistance you may be able to receive.

நீங்கள் தாய்   நாட்டிற்கு திரும் புவது பற்றி சிந்திக்கின்றீர்கள் என்றால், திரும்புவதற்கான தீர்மானம் உங்களுடையது என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். நீங்கள் நாட்டில் இல்லாத நேரத்தில் இலங்கையிலும் நிலைமைகள் மாறியிருக்கின்றன. கீழ்வரும் வழிமுறைகளினுடாக கூடுமான அளவுக்கு அதிகமான தகவலை பெற்றுக்கொள்ள முயற்சி எடுங்கள்:

  1. இலங்கையில்,நீங்கள் திரும்புவதற்கு உத்தேசித்திருக்கும் இடத்திலுள்ள                                                             குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை தொலைபேசி,கடிதம்அல்லது மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டு நீங்கள் திரும்புவதற்கு உத்தேசித்துள்ள பிரதேசத்தில் தற்போது நிலைமைகள் எவ்வாறிருக்கின்றன  என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள்.
  2. நீங்கள் அகதி அந்தஸ்து அல்லது புகலிடம் பெற்றுள்ள நாட்டிலுள்ள UNHCR அதிகாரிகளுடன் உரையாடுங்கள்.UNHCR ஊழியர்களினால்,உங்களுக்குள்ள தெரிவுகள் குறித்து கலந்துரையாட முடிவதுடன் எவ்வாறான உதவிகளை உங்களால் பெறக்கூடியதாக இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளவும் உங்களுக்கு உதவி அளிப்பார்கள்.

Applying for repatriation | நா வதகான ணத

A. For Camp Refugees:

Please submit a written application with the following information:

  • Name and age of the family members wanting to repatriate
  • Address and phone number of the place of return in Sri Lanka
  • Phone number of the applicant
  • The following supporting documents should be attached to the application: copies of the refugee family ID card, certificates of birth, death and marriage documents issued by the relevant authorities in Tamil Nadu; and if available, copies of the SL emergency travel document (ETD) and exit permit (EP).

நாடு திரும்புவதற்கான விண்ணப்பித்தல்

நீங்கள் முகாம் அகதிகளாக இருப்பின் கீழே குறிப்பிட்டுள்ள ஒரு மனுவை சமர்ப்பிக்க வேண்டும்

  • உங்களது குடும்பத்திலுள்ள நாடு திரும்ப விரும்பும் நபர்களின் பெயர் மற்றும் வயது
  • தங்களது தற்போதைய முகவரி மற்றும் தொலைபேசி எண்
  • இலங்கையில் திரும்ப விரும்பும் முகவரி மற்றும் இலங்கையிலுள்ள குடும்ப நபர்கள் அல்லது நண்பர்களின் தொலைபேசி எண்
  • மேலும் தாங்கள் எழுதி அனுப்பும் மனுவோடு இணைத்து கட்டாயம் அனுப்ப வேண்டும் முகாமில் உள்ள குடும்ப அடையாள அட்டையின்,  தங்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண பதிவு சான்றிதழ் மற்றும் இலங்கை திரும்பி செல்வதற்கான கடவுச்சீட்டு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்பட்ட வெளி செல்லும் அனுமதி (இருந்தால்)

 

B. For those staying outside camps:

If you do not have camp registration or if your camp registration has been removed or if you have chosen to live outside the camp and intend to return to Sri Lanka, you would be levied visa fees and an overstay penalty from the day you have been living without registration.

The Government of India has implemented a procedure to waive the visa fees and overstay penalty for refugees who opt to voluntarily return to Sri Lanka. The overstay penalty waiver consideration is available on a case to case basis for Sri Lankan nationals who arrived in India prior to 9th January 2015. The application can be sent via post or handed in person at:

Commissionerate of Rehabilitation
4th Floor, Ezhilagam Annex Building,
Chepauk, Chennai 600005
Phone : 044 28515288

While submitting application to The Commissionerate of Rehabilitation, Chennai

  • Send a written application mentioning names and ages of all individuals intending to return
  • Provide the date of arrival of all members of the family
  • Provide the date of birth of children born in India
  • Provide your phone number and complete residential address
  • The following supporting documents should be attached to the application: copies of latest police registration copies for all family members, certificates of birth, death and marriage documents issued by the relevant authorities in Tamil Nadu; copies of the SL emergency travel document (ETD), copies of passport used on arrival and copy of the visa page.

முகாமிற்கு வெளியே வசிக்கும் நபர்களாக இருப்பின்

தற்பொழுது முகாமில் இல்லை என்றாலோ அல்லது முகாமில் பதிவு நீக்கம் பெற்றிருந்தாலோ அல்லது நீங்கள் முகாமிற்கு வெளியே காவல்துறை பதிவோடு தங்கியிருந்தாலோ தற்போது நாட்டிற்கு திரும்ப விருப்பம் இருந்தால் நீங்கள் வெளிச்செல்லும் அனுமதி பெறுவது சிரமமாக இருக்கும் ஏனெனில் தங்களின் வெளிச்செல்லும் அனுமதி விண்ணப்பத்தை பரிசீலிக்க தண்டத் தொகை அரசாங்கத்தால் அறவீடு செய்யப்படும்.

இதற்காக இந்திய அரசாங்கம் ஒரு சிறப்பு திட்டத்தை அமல்படுத்தி இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 09ம் தேதி ஜனவரி மாதம் 2015ஆம் ஆண்டிற்கு முன்பாக வந்த அனைவருக்கும் அவர்களின் தனிப்பட்ட நிலைமை கருதி இந்த மிகை தங்கல் தண்ட தொகையானது தள்ளுபடி செய்ய படுகிறது இதற்காக விண்ணப்பிக்க நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

மறுவாழ்வு துறை ஆணையர் அலுவலகம்

நான்காவது தளம் எழிலகம் இணைப்பு கட்டிடம்

சேப்பாக்கம்,, சென்னை: 6 0 0 0 0 5

தொலைபேசி எண் : 0 4 4 2 8 5 1 5 2 8 8

 

மேல் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப

  • தங்களது பெயர் வயது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரத்தை மனுவாக எழுதி சமர்ப்பிக்க வேண்டும்
  • இந்தியாவிற்கு வந்த தேதியை குறிப்பிட வேண்டும்
  • தங்களுக்கு இந்தியா வந்ததற்கு பின்பு குழந்தைகள் பிறந்திருந்தால் அவர்களின் பிறப்பு தேதியை குறிப்பிட வேண்டும்
  • தங்களது தற்போதைய முழுமையான முகவரியையும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிடவும்
  • மேலும் தங்களது விண்ணப்பத்தோடு உங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் காவல்துறை பதிவு ஆவண நகல்களையும், குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு, இறப்பு திருமணம் போன்ற பதிவு சான்றிதழ்களையும், தங்களது கடவுச்சீட்டு மற்றும் இந்தியா விமானம் மூலமாக வரும் பொழுது பயன்படுத்திய கடவுச்சீட்டு மற்றும் விசா நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்

Voluntariness verification interviews | சுய விருப்பத்தை உறுதி செய்யும் நேர்காணல்

For return, verification interviews are held by UNHCR staff in the districts and the Commissionerate of Rehabilitation in Chennai. Refugees have to be present at the interview with all their family members who intend to return.

The following documents/ photos should be presented by refugees for verification to UNHCR staff at the time of interview:

  • Refugee family ID card issued by the Government of Tamil Nadu or copy of the order of overstay penalty waiver for non-camp refugees
  • One way travel document issued by the Sri Lankan Deputy High Commission in Chennai, if available
  • Marriage registration certificates, if available
  • Indian birth certificate of refugee children born in India
  • Sri Lankan birth certificate of refugee children born in India, if available
  • Address and phone number of the relative in Sri Lanka to whom the refugee family is returning
  • 2 passport size colour photos of each repatriating refugee
  • Exit permit issued by the Collector, if available (original and a copy) or deficiency letter provided by FRRO

UNHCR அலுவலர்களால் மாவட்டங்களிலும் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் அலுவலகங்களிலும் சுய விருப்பத்தை உறுதி செய்யும் நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. நாடு திரும்ப விரும்பும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த நேர்காணல்களில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு சுய விருப்பத்தை உறுதி செய்யும் நேர்காணலில் கலந்து கொள்ள வரும் அகதிகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை தவறாது எடுத்து வரவேண்டும்

 

  • தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள அகதிகளுக்கான குடும்ப அட்டை / அரசால் வழங்கப்பட்ட மிகை தங்கல் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசு ஆணை
  • திருமண பதிவு ஆவணம் (இருந்தால்)
  • இந்தியாவில் பிறந்த அகதி குழந்தைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்
  • இலங்கையில் திரும்ப இருக்கும் தங்களது உறவினர்களின் முகவரியும் தொலைபேசி எண்ணும்
  • நாடு திரும்ப இருக்கும் அனைத்து நபர்களின் 02 பாஸ்போர்ட் சைஸ் வண்ண புகைப்படம்
  • மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட வெளி செல்லும் அனுமதி அல்லது வெளிநாட்டவர் பதிவு அலுவலர் வழங்கிய கடிதம் (இருந்தால்)

Applying for Emergency Travel Document | இலங்கை செல்வதற்கான ஒருவழி கடவுச்சீட்டு பெறும் பெறுவது

Refugees who do not have a Sri Lankan passport can repatriate with a one-way emergency travel document (ETD) issued by the Sri Lanka Deputy High Commission (SLDHC) Office in Chennai.

Refugees applying for ETD have to come in person to the SLDHC Office in Chennai with all family members who intend to repatriate.

The Sri Lanka Deputy High Commission is located at:
No 56, Sterling Road,
Near Loyola College,
Nungambakkam, Chennai,
Tamil Nadu 600034,
Phone: 044 2824 1896

The ETD is valid for one year. They can be renewed for another 6 months. UNHCR assists refugees with the renewal.

இலங்கை அகதிகள், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் மூலமாக இலங்கை செல்வதற்கான ஒருவழி கடவுச்சீட்டு பெற்று நாடு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒருவழி கடவுச்சீட்டு பெறுவதற்கு அகதிகள் நேரடியாக இலங்கை துணை தூதரகத்தை அனைத்து குடும்ப உறுப்பினர்களோடு சென்று விண்ணப்பிக்கலாம்.

தென்னிந்தியாவிற்கான இலங்கைத்  துணைத்தூதரக முகவரி:

56, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம் சென்னை 600 034.

தொ.பே : 0091 44 28241896,

இந்த கடவுச்சீட்டு ஒரு வருட காலம் செல்லுபடி ஆகும்.  இதை மேலும் ஆறு மாத அளவிற்கு புதுப்பிப்பதற்கு UNHCR நிறுவனம் உதவும்.

Refugees living within and outside camps are required to obtain an exit permit from the Government of India before departure. A copy of the exit permit is a mandatory document that is to be produced at immigration at the airport of departure. The procedure to obtain an exit permit is detailed below:

இலங்கை திரும்புவதற்கான பயண முன்னேற்பாடுகள் :

 முகாமில் வசிப்போர்களாக இருந்தாலும் முகாம்களுக்கு வெளியே வசிப்பவர்கள்ஆக இருந்தாலும் இந்திய அரசின் வெளி செல்லும் அனுமதியை முறையாக பெறவேண்டும். இந்த வெளி செல்லும் அனுமதி ஆவணம் விமான நிலையத்தில் பயணத்திற்கு முன்பாக குடிஅகல்வு அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

 


Initiating the exit process at the district level for camp refugees | முகாமில் வசிக்கும் அகதிகள் வெளி செல்லும் அனுமதியை பெறும் முறை

After obtaining the ETD – one-way emergency travel document, refugees living in camps should submit an application to the district collector’s office for an exit authorization. Processing of this application involves security clearance procedures at different levels and hence the application should be made well in advance. Refugees are advised to submit the application for an exit authorization as soon as they obtain the ETDs.

Immediately after obtaining the authorization from the district collector, a copy of the document should be sent to UNHCR indicating the date the refugee wants to repatriate.

முகாம்களில் வசிக்கும் அகதிகள் இலங்கை செல்வதற்கான ஒரு வழிப் பயண கடவுச்சீட்டை பெற்றவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளிச்செல்லும் அனுமதிக்கான முன்மொழி உத்தரவு பெற விண்ணப்பிக்க வேண்டும். பல்வேறு நிலைகளில் காவல்துறை அதிகாரிகளின் சான்று பெறவேண்டிய தேவை இருப்பதால் முன்னதாகவே இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். எனவே நாடு திரும்பும் அகதிகள் அவர்கள் கடவுச்சீட்டை பெற்ற உடனேயே இந்த அனுமதி விண்ணப்பிப்பது நல்லது.

மாவட்ட ஆட்சியர் வழங்கிய வெளிச்செல்லும் முன்மொழிவு நகலுடன் எந்த தேதியில் நாடு திரும்ப விரும்புகிறார்கள் விரும்புகிறீர்கள் என குறிப்பிட்டு UNHCR நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.


Final exit formalities for camp and non-camp refugees | முகாம் மற்றும் முகாமில் முகாமிற்கு வெளியே வசிக்கும் அகதிகள் இறுதியான வெளி செல்லும் அனுமதி பெறுவது

On receipt of the overstay penalty waiver or the district collector’s exit proceedings,  refugees should at the earliest apply for an exit permit via the Indian immigration’s web portal (https://indianfrro.gov.in/eservices/home.jsp).  In case of any difficulties please contact UNHCR for assistance.

முகாமிற்கு வெளியே வசிக்கும் அகதிகள் மிகை தங்கல் தொகை தள்ளுபடி ஆணையை பெற்றவுடன், முகாமில் வசிக்கும் அகதிகள் மாவட்ட ஆட்சியரின் வெளிச்செல்லும் முன்மொழிவை பெற்றவுடன் இந்திய குடிவரவு இணையதளத்தில் (https://indianfrro.gov.in/eservices/home.jsp) இறுதியான வெளி செல்லும் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில் ஏதேனும் சவால்கள் இருந்தால் UNHCR அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.


Preparation for Travel | பயண முன்னேற்பாடு

On submission of the copy of the exit application submitted at the Indian immigration web portal along with the letter to UNHCR requesting tickets with an indication of the preferred month of travel, UNHCR will dispatch by post the tickets for travel to Colombo to the refugees.

UNHCR will conduct a pre-departure orientation session and handover required certificates of return and other voluntary return related documents. UNHCR will also handover or send through postal money order a sum of INR 750 per person as a local transportation allowance to reach the relevant airport of departure.

இறுதியான வெளிச்செல்லும் அனுமதி பெறுவதற்கு இந்திய குடிவரவு இணையதளத்தில் விண்ணப்பிதற்கான அத்தாட்சி யோடு unhcr நிறுவனத்தை தொடர்பு கொண்டால் நாடு திரும்புவதற்கான பயணச்சீட்டு (கொழும்பு விமான நிலையத்தை சேர்வதற்கு ) அனுப்பி வைக்கப்படும்.

UNHCR நிறுவனம் பயண புறப்பாடு முந்திய தகவல்களை வழங்கும்.  மேலும் நாடு திரும்புவர்களுக்கு தேவையான சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களையும் வழங்கும்.

UNHCR நிறுவனம் நாடு திரும்ப இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 750 போக்குவரத்து மானியமாக அஞ்சல் அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


On arrival at Colombo Airport, Sri Lanka

  • UNHCR Sri Lanka staff will meet and greet you at the airport in Colombo, before you pass the immigration counter, to make sure you have arrived safely.
  • UNHCR staff will assist you to complete immigration formalities.
  • Following completion of immigration formalities, UNHCR staff will assist you to complete security screening and necessary health screenings.
  • Following the security and health screening, UNHCR staff will assist you to collect your luggage and navigate through the customs formalities at the airport.
  • Following the completion of customs formalities, UNHCR staff will assist you to exit to the airport lobby where you will meet your relatives/friends/family members who are waiting to receive you.
  • After reaching the airport lobby, UNHCR staff will escort the head of the family to the UNHCR office counter located adjoining the airport lobby in order to provide the reintegration assistance.
  • Through the Bank of Ceylon, at the Airport;
    • UNHCR will provide you with a cash transport grant of LKR 2,500 per person to help you get back to your home in a safe and dignified manner.
    • UNHCR will provide you with a cash reintegration grant, each adult individual will receive LKR 10,000 and each minor will receive LKR 7,500.
    • UNHCR will provide you with a cash grant of LKR 5,000 per individual family and LKR 10,000 per family to procure non-food items.
  • UNHCR will also provide mobility aids such as a wheelchair, crutches or a walking aid for returnees who are in need.
  • When you reach your town or village contact the closest UNHCR office to register for protection monitoring.

.UNHCR ஊழியர்கள் விமான நிலையத்திலுள்ள UNHCR அலுவலகத்துக்கு உங்ககளை அழைத்துச்  செல்ல முன்னதாக ,வருகைதரும் பயணிகளுக்கான நடைமுறைகள்  நடைபெறும் வரைக்கும்உங்களோடு உடனிருப்பதுடன் உங்களது பயணப்பொதி வெளியேற்ற செயன்முறைகள் விடயத்தில் உதவி வழங்குவார்கள்.

  • நீங்கள் குடிவரவு கருமபீடத்தை அடைவதற்கு முன்னர் நீலநிற UNHCR மேலங்கி அல்லது UNHCR ரீ சேட் அணிந்திருக்கும் UNHCR ஊழிய உறுப்பினர்களுடன் உரையாடவும்.
  • விமான நிலையத்தில் நீங்கள் குடிவரவு,பாதுகாப்பு மற்றும் சுங்க நடைமுறைகளை பூர்த்தி செய்வதற்கு UNHCR ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள் .
  • UNHCR உங்களுக்காக வங்கியின் மூலமாக ஒரு போக்குவரத்துக்கு மானிய த்தொகையை இலங்கை ரூபா 2,500 இனை உங்களுக்கு பணமாக வழங்கும். UNHCR மீள் ஒருமைப்பாட்டு மானியத்தொகை யாக   ஒவ்வொரு வயது வந்த தனிநபரும்  தலா  இலங்கை ரூபா 10,000 யும் பருவமடையாத  ஒவ்வொருவருக்ம் தலா  இலங்கை ரூபா 7,500 யும் வழங்கும்
  • மூன்று நபருக்கு அதிகமான குடும்பத்தாருக்கு உணவு அல்லாத பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கை ரூபா 10000மும் மூன்று நபருக்கு குறைவான குடும்பத்தாருக்குஇலங்கை ரூபா 5000மும்  மானியத்தொகையாக UNHCR நிறுவனம் வழங்கும்
  • விமான நிலையத்திலிருந்து உங்களது பூர்வீக இடத்தை சென்றடைவதற்கு உதவிபுரியும் உங்களுக்குரிய போக்குவரத்து மானியத்தொகை, உங்களது மீளத் திரும்பல் தொடர்பான மனவளத்துணை மற்றும் அலுவலக முகவரிகள் மற்றும் சேவைகள் பற்றியதகவல்கள் வழங்கப்படும்.
  • சிறப்புத்தேவையுள்ள நாடுதிரும்புவோருக்கு சக்கரநாற்காலி ,ஊன்றுகோள்,கைத்தடி வழங்கப்படும்.
  • நீங்கள் உங்களது நகரத்தை அல்லது கிராமத்தை சென்றடைந்ததும்,பாதுகாப்பை கண்காணிப்பதற்க்காக பதிவு செய்துகொள்ளும் பொருட்டு உங்களுக்கு அருகிலுள்ள UNHCR அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்.

Back in the District of Return | மாவட்டத்தை அடைந்த பின்னர்

  1. Register with the Grama Niladhari office of the Sri Lankan Government in your village. Take with you a copy of the Voluntary Repatriation Form and your emergency travel documents.
  2. Contact the closest UNHCR office to register for protection monitoring.
  • Be in contact with the UNHCR Staff in your District of return. You can do this by:
    • Taking your Voluntary Repatriation Form with you.
    • Provide your contact details to UNHCR.
    • Inform UNHCR of any special needs or concerns you or your family members may have.
    • Attend the Mine Risk Education session.
    • Talk to your local public health office about health screening.
    • Inform UNHCR staff and the local authorities if you change your address.
  1. உங்களது கிராமத்திலுள்ள,இலங்கை அரசாங்கத்தின் கிராமசேவகர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.தன்னார்வ தாயகம் திரும்பல் படிவம்(VRF) மற்றும் அவசரகால பயண ஆவணம் ஆகியவற்றின் பிரதி ஒன்றையும் உங்களோடு கொண்டு செல்லுங்கள்.
  2. நீங்கள் நாடு திரும்பி வசிக்கின்ற மாவட்டத்திலுள்ள UNHCR ஊழியர்களுடன் தொடர்பில் இருங்கள். இதனை பின்வரும் வழிமுறைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்:
  • தன்னார்வ தாயகம் திரும்பல் படிவத்தை உங்களுடன் கொண்டு செல்லவும்
  • உங்களைதொடர்புகொள்ளக்கூடியவிபரங்களைUNHCRற்கு வழங்கவும்
  • உங்களுக்கு அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் விஷேட தேவைகள் அல்லது பிரச்சனைகள் இருந்தால் UNHCR ற்கு   தகவல் தெரிவிக்கவும்
  • கண்ணிவெடி அபாய கல்வியூட் டல் செயலமர்வில் கலந்து கொள்ளவும்.
  • ‘சுகாதார பரிசோதனை’ தொடர்பில் உங்களது பொதுச் சுகாதார பரிசோதகருடன் உரையாடவும் .
  • உங்களது முகவரியை மாற்றினால், UNHCR ஊழியர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு நீங்கள் அறிவிக்க வேண்டும்.

Contact details of UNHCR in Sri Lanka

UNHCR Representation office, Colombo
97, Rosmead Place, Colombo 07
TP:   +94 (0)11 268 3968/69
Fax: +94 (0) 11 268 3971

பிரதிநிதித்துவ  அலுவலகம்

97,ரொஸ்மீட்பிளேஸ், கொழும்பு- 7

தொ.பே:+94(0)112683968,69

தொலைநகல்:94(0)112683971

UNHCR Field office, Jaffna
386, Navalar Road, Nallur, Jaffna
TP:   + 94 (0) 21 222 2005, 2215101
Fax: + 94 (0) 21 222 4534

யாழ்ப்பாணம் களஅலுவலகம்

386,நல்லூர்சாலை,நல்லூர், யாழ்ப்பாணம்

தொ.பே:94(0)212222005

தொலைநகல்:94(0)212224534

How can we improve this website? Please feel free to give us feedback if there is any information you believe is missing or could be wise to have on this website.

(Your privacy will be respected and the confidentiality of your answers will be maintained)