நான் இன்னொரு நாட்டில் UNHCRல் பதிவு செய்துள்ளேன், என் விண்ணப்பத்தை பற்றிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை அணுக வேண்டும்
UNHCR பிராந்திய பிரதிநிதித்துவம் மற்றொரு UNHCR அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் பெற உதவுவதில்லை. நீங்கள் நேரடியாகப் பதிவு செய்த அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள UNHCR அலுவலகங்களுக்கான தொடர்பு விவரங்கள் UNHCR இணையதளத்தில் காணலாம்.
நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன் மற்றும் புகலிடம் கோர விரும்புகிறேன். நான் UNHCR உடன் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்?
UNHCR ஆஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை தீர்மானிப்பதில் ஈடு படுவதில்லை. எங்கள் அலுவலகத்தில் புகலிடம் கோருவோர் என பதிவு செய்ய முடியாது.
உங்கள் விண்ணப்பத்தை தயாரிப்பதில் ஒரு வழக்கறிஞரின் அல்லது ஒரு பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவரின் ஆலோசனையைப் பெறவும் என UNHCR உங்களை பரிந்துரைக்கிறது.
பதிவுசெய்யப்பட்ட குடிவரவு முகவர்களின் பட்டியல் ஆஸ்திரேலிய இடம்பெயர்வு முகவர்கள் பதிவு அதிகார அமைப்பு வழியே பெற முடியும்.