கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு

YouTube ஐப் பயன்படுத்தும்போது, உலகம் முழுவதிலும் இருக்கும் சமூக மக்களுடன் இணைகிறீர்கள். YouTube இல் உள்ள ஒவ்வொரு அருமையான, புதிய சமூக அம்சமும் மக்களிடம் குறிப்பிட்ட அளவு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த நம்பிக்கையைப் பல்லாயிரக்கணக்கான பயனர்கள் மதிக்கின்றனர், அதேபோன்ற பொறுப்பு உங்களுக்கும் இருப்பதாக நம்புகிறோம். பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், அனைவருக்கும் ஏற்ற வகையில் YouTube ஐ சுவாரசியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் வைத்திருக்க முடியும்.

YouTube இல் பார்க்கும் சில உள்ளடக்கம் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஏதேனும் ஒரு உள்ளடக்கம் பொருத்தமற்றது என நினைக்கிறீர்கள் எனில், கொடியிடும் அம்சத்தைப் பயன்படுத்தி, மதிப்பாய்விற்காகச் சமர்ப்பிக்கலாம். அதை எங்கள் YouTube பணியாளர் மதிப்பாய்வு செய்வார். கொடியிடப்பட்ட உள்ளடக்கமானது எங்கள் சமூக வழிகாட்டிகளை மீறுகிறதா என்பதைக் கண்டறிய, ஒவ்வொரு நாளின் 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களிலும் எங்கள் பணியாளர் அதைக் கவனமாக மதிப்பாய்வு செய்வார்.

பிரச்சனைகளில் சிக்காமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, இதோ சில பொது விதிகள். இந்த விதிகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பின்பற்றுங்கள். சாமர்த்தியமாகத் தவறுகளைச் செய்து, தப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தேடவோ, வழிகாட்டல்களை உங்களுக்குச் சாதகமான விதத்தில் எடுத்துக்கொள்ளவோ முயலாதீர்கள். அவற்றைப் புரிந்துகொண்டு அவை உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு மதிப்பளிக்க முயலுங்கள்.

நிர்வாணம் அல்லது பாலியல் உள்ளடக்கம்

YouTube என்பது ஆபாசம் அல்லது பாலியல் உணர்வை வெளிப்படுத்தும் உள்ளடக்கங்களுக்கான தளம் அல்ல. நீங்கள் பதிவேற்றப் போகும் வீடியோ அப்படிப்பட்டதாக இருந்தால், அது உங்களுடையதாகவே இருந்தாலும், YouTube இல் பதிவேற்ற வேண்டாம். மேலும், நாங்கள் சட்ட நடைமுறைகளின்படி செயல்படுவதால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக, அது குறித்துப் புகாரளிக்கப்படும். மேலும் அறிக

தீங்குவிளைவிக்கும் அல்லது ஆபத்தான உள்ளடக்கம்

பிறருக்கு மோசமாகத் தீங்கு ஏற்படுத்தக்கூடிய, குறிப்பாகக் குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்களைச் செய்ய ஊக்குவிக்கும் வீடியோக்களைப் பதிவிடாதீர்கள். அத்தகைய கேடு விளைவிக்கக்கூடிய மற்றும் ஆபத்தான செயல்பாடுகளைக் காட்டக்கூடிய வீடியோக்கள் அவற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, வயதுக் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகலாம் அல்லது அகற்றப்படலாம். மேலும் அறிக

வெறுக்கத்தக்க உள்ளடக்கம்

எங்கள் தயாரிப்புகள், கருத்துச் சுதந்திரத்திற்கான தளங்களாகும். ஆனால், இனம் அல்லது பூர்வீகக் குடி, மதம், ஊனம், பாலினம், வயது, தேசியம், அதிகார நிலை, அல்லது பாலியல் பிரிவு/பாலின அடையாளம் போன்றவற்றின் அடிப்படையில் தனிபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிரான வன்முறையைப் பரப்பும் அல்லது தூண்டும் உள்ளடக்கத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை, இது போன்ற அடிப்படை குணங்களின் அடிப்படையில் வன்மத்தை ஏற்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டவர்களையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. உள்ளடக்கமானது, சமநிலையுடன் கூடிய விமர்சனமாக இருக்கலாம், ஆனால் குறிப்பிட்ட குழுவினரைத் தாக்குவது முதன்மையான நோக்கமாக இருந்தால், அந்த உள்ளடக்கம் வரம்பை மீறியதாகும். மேலும் அறிக

வன்முறை அல்லது கிராஃபிக் உள்ளடக்கம்

அதிர்ச்சியூட்டக்கூடிய, பரபரப்பான அல்லது அவசியமில்லாத, வன்முறை மிகுந்த அல்லது கொடூரமான உள்ளடக்கத்தைப் பதிவிடுவது சரியல்ல. செய்திகள் அல்லது ஆவணப் படங்களுக்காக, கிராஃபிக் காட்சியுடன் கூடிய உள்ளடக்கத்தைப் பதிவிட்டால், வீடியோவில் வருவது என்ன என்பதைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ள உதவியாக, போதுமான தகவலை வழங்க மறக்காதீர்கள். குறிப்பிட்ட வன்முறைச் செயல்களைச் செய்யும்படி மற்றவர்களை ஊக்குவிக்காதீர்கள். மேலும் அறிக

துன்புறுத்தல் மற்றும் இணையவழி அவதூறு

YouTube இல் இழிவுபடுத்தும் வீடியோக்கள் மற்றும் கருத்துகளை இடுவது சரியல்ல. தொல்லையானது, தீங்கு ஏற்படுத்தக்கூடிய தாக்குதலாக எல்லை மீறும் சமயங்களில், அது குறித்துப் புகாரளித்து, அகற்றலாம். சில சமயங்களில், பயனர்கள் சற்றே எரிச்சலூட்டலாம் அல்லது குறுகிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ளலாம், இவற்றைப் பொருட்படுத்தக் கூடாது. மேலும் அறிக

ஸ்பேம், உண்மைக்கு மாறான தரவுத்தகவல் மற்றும் ஊழல்கள்

யாருமே ஸ்பேமை விரும்புவதில்லை. பார்வைகளை அதிகரிக்கும் நோக்கத்தில் தவறான விவரிப்புகள், குறிச்சொற்கள், தலைப்புகள் அல்லது சிறுபடவுருக்களை உருவாக்க வேண்டாம். கருத்துகள் மற்றும் தனிப்பட்ட செய்திகள் உள்ளிட்ட, பெரியளவிலான, தேவையில்லாத அல்லது மீண்டும் மீண்டும் வரக்கூடிய உள்ளடக்கத்தைப் பதிவிடுவது சரியானதல்ல. மேலும் அறிக

அச்சுறுத்தல்கள்

உயிரைக் கொன்று தின்னுதல், பின்தொடர்ந்து பயமுறுத்தல், மிரட்டல், துன்புறுத்தல், அச்சுறுத்தல், தனியுரிமை மீறல், மற்றவர்களின் தனிப்பட்ட தகவலை வெளிப்படுத்துதல் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட மற்றவர்களைத் தூண்டுவது அல்லது பயன்பாட்டு விதிமுறைகளை மீறுவது போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இவை போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது தெரிந்தால், YouTube இலிருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்கள். மேலும் அறிக

பதிப்புரிமை

பதிப்புரிமைக்கு மதிப்பளிக்கவும். நீங்கள் உருவாக்கிய அல்லது பயன்படுத்த அங்கீகாரம் உள்ள வீடியோக்களை மட்டும் பதிவேற்றவும். அதாவது, நீங்கள் உருவாக்காத வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டாம், மேலும் இசை ட்ராக்குகள், பதிப்புரிமை பெற்ற நிகழ்ச்சிகளின் துணுக்கு வீடியோக்கள், பிற பயனர்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் போன்றவற்றை, உரிய அங்கீகாரம் இல்லாமல், மற்றவரின் பதிப்புரிமை கொண்ட உள்ளடக்கத்தை உங்கள் வீடியோக்களில் பயன்படுத்த வேண்டாம். மேலும் தகவலுக்கு, எங்களின் பதிப்புரிமை மையத்தைப் பார்க்கவும். மேலும் அறிக

தனியுரிமை

யாரேனும் உங்கள் அனுமதியில்லாமல் உங்களுடைய தனிப்பட்ட தகவலை இடுகையிட்டாலோ, உங்களின் வீடியோவைப் பதிவேற்றினாலோ, எங்கள் தனியுரிமை வழிகாட்டுதல்களின் அடிப்படையில், அத்தகைய உள்ளடக்கத்தை அகற்றுமாறு கோரிக்கை வைக்கலாம். மேலும் அறிக

ஆள்மாறாட்டம்

மற்றொரு சேனல் அல்லது தனிநபரை ஆள்மாறாட்டம் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட கணக்குகள், எங்களின் ஆள்மாறாட்டக் கொள்கையின்படி அகற்றப்படலாம். மேலும் அறிக

குழந்தை மீதான முறைகேடு

பொருத்தமற்ற உள்ளடக்கத்தைக் கண்டால் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்ளவும். மேலும், நாங்கள் சட்ட நடைமுறைகளின்படி செயல்படுவதால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக, அது குறித்துப் புகாரளிக்கப்படும் மேலும் அறிக

கூடுதல் கொள்கைகள்

பல்வேறு தலைப்புகளுக்கான கூடுதல் கொள்கைகள். மேலும் அறிக

YouTube படைப்பாளர்கள், YouTube இயங்குதளத்தில் மற்றும்/அல்லது அதற்கு வெளியே மேற்கொள்ளும் நடவடிக்கையானது எங்களின் பயனர்கள், சமூகம் அல்லது சார்ந்த பிறருக்குத் தீங்கிழைக்கும்படி இருந்தால், பல காரணிகளின் (எவ்வளவு மோசமான செயல் மற்றும் எவ்வளவு அடிக்கடி நடக்கும் செயல் என்பது போன்றவை) அடிப்படையில், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
படைப்பாளர்களின் சிறப்புரிமைகளை இடைநிறுத்தி வைப்பதிலிருந்து கணக்கை நிரந்தரமாக முடக்குவது வரை, படைப்பாளர்களின் செயலைச் சார்ந்து எங்களது நடவடிக்கை இருக்கும்.

உங்கள் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். YouTube கருவிகள் மற்றும் ஆதாரங்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளுங்கள், மேலும் கீழேயுள்ள பல தலைப்புகள் தொடர்பான உதவிக் குறிப்புகளைப் பெறுங்கள்.

பதின் வயதினர் பாதுகாப்பு

YouTube இல் பாதுகாப்பாக இருப்பதற்கு பயனுள்ள சில கருவிகளும் சுலபமான உதவிக்குறிப்புகளும் இங்குள்ளன. மேலும் அறிக

கட்டுப்பாட்டுப் பயன்முறை

நீங்களும் உங்கள் குடும்பமும் பார்க்க விரும்பாத ஆட்சேபிக்க சாத்தியமுள்ள உள்ளடக்கத்தைத் தனிப்படுத்தவும். மேலும் அறிக

தற்கொலை மற்றும் தானாக ஏற்படுத்திக்கொள்ளும் காயம்

நீங்கள் தனியாக இல்லை. உதவி தேவையா? அமெரிக்காவில் இலவச, 24/7 ரகசிய ஆதரவிற்கு நேஷனல் சூசைய்டு பிரிவென்ஷன் லைஃப்லைனை 1-800-273-8255 என்ற எண்ணில் அழையுங்கள். மேலும் அறிக

கல்வியாளருக்கான ஆதாரங்கள்

உங்களையும் உங்கள் மாணவர்களையும் ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் சில ஆதாரங்கள் இங்குள்ளன. மேலும் அறிக

பெற்றோருக்கான ஆதாரங்கள்

YouTube இல் உங்களின் குடும்பத்தினர் அனுபவத்தை நீங்கள் நிர்வகிப்பதற்கு உதவும் சில கருவிகள் மற்றும் ஆதாரங்கள் மேலும் அறிக

கூடுதல் ஆதாரங்கள்

YouTube பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் ஆதாரங்கள் மேலும் அறிக

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை விரைவாக அணுகுதல். மேலும் அறிக

சட்டப்பூர்வக் கொள்கைகள்

சட்டரீதியாக நீக்கும் கொள்கைகள் மற்றும் புகார்களைச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறை குறித்த தகவல். மேலும் அறிக

YouTube இல் உள்ளடக்கம் குறித்து எவ்வாறு புகாரளிப்பது என்பதைப் பற்றியும், எங்கள் சமூக வழிகாட்டுதல்களை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

வீடியோவைப் புகாரளித்தல்

உள்ளடக்கத்தை எப்போது, ஏன் மற்றும் எப்படிக் கொடியிடுவது. மேலும் அறிக

துஷ்பிரயோகம் செய்பவரைப் புகாரளித்தல்

இங்கே புகாரை நேரடியாகப் பதிவுசெய்யவும். மேலும் அறிக

சட்டரீதியான புகாரளித்தல்

இங்கே புகாரை நேரடியாகப் பதிவுசெய்யவும். மேலும் அறிக

தனியுரிமை மீறலைப் புகாரளித்தல்

தளத்தில் உள்ள வீடியோக்கள் அல்லது கருத்துகள் உங்கள் தனியுரிமை அல்லது பாதுகாப்புணர்வை மீறினால் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் அறிக

புகாரளிப்பதற்கான பிற வழிகள்

வீடியோவைக் கொடியிடுவதால் மட்டுமே சிக்கலைத் துல்லியமாகத் தெரிவிக்க முடியாத போது மேலும் அறிக

வயதுக் கட்டுப்பாடுகள்

சில சமயங்களில், ஏதேனும் ஒரு வீடியோ எங்கள் வழிகாட்டுதல்களை மீறாமலிருந்தாலும், அனைத்து வயதினரும் பார்ப்பதற்கு ஏற்றதாக இல்லாமலிருக்கலாம் என்பதால் வயதுக் கட்டுப்பாட்டை அமைத்திருப்போம். மேலும் அறிக

சமூக வழிகாட்டுதல்களின் எதிர்ப்புகள்

எந்த வகை எதிர்ப்புகள் மற்றும் அவற்றை எப்படிக் கையாளுகிறோம். மேலும் அறிக

கணக்கு முடித்தல்கள்

சமூக வழிகாட்டுதல்களைத் தொடர்ச்சியாகவோ, தீவிரமாகவோ மீறினால் கணக்கு நீக்கப்பட்டுவிடும். மேலும் அறிக

வீடியோ எதிர்ப்புகளை மேல்முறையீடு செய்தல்

எதிர்ப்பு வரும்பட்சத்தில் என்ன செய்யவேண்டும். மேலும் அறிக